Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழ் , சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி …!!

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கூடிய வழக்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருமுருகன், மணியரசன், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் தேவாரம் திருவாசகம் ஆகியவை உச்சரித்து குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தனர்.மேலும் மனுதாரர்கள்  சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில்  குடமுழுக்கு விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை ஏற்க முடியாது  என்றும் சொல்லப்பட்டது.

இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குடமுழுக்கு நடைபெறும் கருவறை உட்பட அனைத்து இடங்களிலும் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை நாளை காலை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.  இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியாது. அதில் தமிழில் மட்டும் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதோடு தமிழ்  , சமஷ்கிருதத்தில் நடத்தலாம் என்று மடடுரை உயர்நீதிமன்றக்கிளை அனுமதி அளித்திருக்கின்றது.

Categories

Tech |