Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் தளர்வுகள் திரும்பப் பெற வாய்ப்பு… அதிர்ச்சி…!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடு வரும் திங்கட்கிழமை, அதாவது ஜூன் 28ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், புதிய தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் சென்னை, காஞ்சி, மதுரையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். டெல்டா பிளஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைக்கும் தன்மை கொண்டது. பரிசோதனை, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |