Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மாணவர்களே அலர்ட்…. இனி ஒழுங்கீனமாக நடந்தால்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்தால் டிசி சான்றிதழில் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திலுள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாக அல்லது மனரீதியாக தொந்தரவு தந்தால் TC, Conduct certificate ஆகியவற்றில் எந்த காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதனால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் எதற்காகவும் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக் கூடாது. அப்படி ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களின் சான்றிதழ்களில் ஒழுங்கீனமானவர் என குறிப்பிடப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது. செல்போன் எடுத்து வருவதை முற்றிலும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வரும் கல்வியாண்டில் இருந்து நீதிபோதனை வகுப்புகளை நடத்தி விட்ட பிறகே பாடங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |