மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்யாதது கவலையளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.