தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு துறை வீரர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்கல்வி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.