Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு..!!

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் குரூப் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 3000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு சி மற்றும் டி பிரிவு பணியாளர், ஆசிரியர்களுக்கு போன அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூபாய் 1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். மிகை ஊதியம் பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசுக்கு 221.42 கோடி செலவு ஏற்படும் என நிதித்துறை தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |