Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரூ.4000 – தமிழக அரசு புதிய தகவல்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதையடுத்து தற்போது முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்தவகையில் மக்கள் கொரோனாவால் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.

இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருநங்கை கிரேஸ் பானு தொடர்ந்த வழக்கில் மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவருக்கும் ரூபாய் 4000 நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பு முகாம்கள் நடத்தவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |