தமிழகத்தில் மருத்துவ அவசர நிலை என சொல்லக்கூடிய அளவுக்கு தீவிரம் இருப்பதால் கட்டளை மையத்தை உடனே திறக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ராஜாஜி மருத்துவமனையிலும் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன.
இதைத்தொடர்ந்து மு க ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தமிழகத்தில் மருத்துவ அவசர நிலை என சொல்லக்கூடிய அளவுக்கு தீவிரம் இருப்பதால் கட்டளை மையம் ஒன்றை உடனே திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் கட்டளை மையத்தில் உள்ள தகவல்கள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமைய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். ஏழைகளுக்கு கருணை காட்டி உயிரை செலவில்லாமல் மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.