தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள கொரோனா நிவாரண நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திரவ ஆக்சிஜன் வாங்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுக்கு 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.353 கோடி கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.