பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான குரூப்யை தேர்வு செய்யும்போது மொழிப் பாடங்கள் தவிர நான்கு முக்கிய பாடங்கள் இருக்கும்.இதில் மூன்று பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையிலான ஒரு அரசாணை கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.
உதாரணமாக வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் என்ற நான்கு பாடங்களை படிக்க வரும் மாணவர்கள் படிக்கலாம் அல்லது கணிதத்தை விட்டோ அல்லது உயிரியல் விட்டோ ஏதோ மூன்று பாடங்களை கொண்ட பிரிவை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற வகையில் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் இதற்க்கு ஆசிரியர் தரப்பில் இருந்தும், கல்வியாளர்கள் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் மாணவர்களுடைய வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டும் என்றெல்லாம் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த அரசாணை 2019 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டு இருந்தாலும் கூட இந்த கல்வி ஆண்டு 2020- 21 ஆம் ஆண்டிலிருந்துதான் அது நடைமுறைப்படுத்த இருந்தது. தற்போது அதற்கான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த அரசாணையை ரத்து செய்யப்படுவதாகவும், 2020- 21 ஆம் கல்வியாண்டில் இருந்து பழைய நடைமுறையே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.