தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்பில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி ரூ.4000 ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை அளித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மதுரையில் 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும். தென் சென்னையில் கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் சிறப்பு மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.