Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளின் நிலைமை… பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை….!!!!

சமீபத்தில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரியையும் பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது.

இந்நிலையில் பழுதான பள்ளிக் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அப்போது கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்படும். மேலும் பாலியல் புகார் விவகாரங்கள், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இடிக்கப்பட வேண்டிய பள்ளிகளின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |