Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. மேலும்  செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 85 சதவீதம் மட்டுமே 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் 6 தவணைகளாக கட்டணம் வசூலிக்க வேண்டும். வேலை இழந்தோர் மற்றும் வருமானம் இல்லாதவர்களிடம் 75% கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாவிட்டால் அல்லது தாமதமானால் எந்த மாணவரையும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |