Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பரவும் புதிய நோய்…. மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம்…. அரசு எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் நோய் கூடுதலாக பரவி வருகின்றது. தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு இந்த நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வேகமாக பரவி வருவதாகவும் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்களை நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் மற்றும் வீக்கம் ஆகியவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறி. குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோய் பாதித்தவர்கள் மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மருந்து வாங்க வேண்டும். மேலும் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |