தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தகுதியுள்ள மாற்றுதிறனாளிகளுக்கான திட்டங்களை உடனே வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நலத்திட்டங்கள் பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் உதவி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.