தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றபடுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அது மட்டுமன்றி சில பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து பள்ளிகளில் குருநாத் தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மாணவர்கள் முக கவசம் அணிவது, தனிமனித இடைவேளை கடைபிடிப்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் தினமும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். வானவர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு அறிகுறி இருந்தால் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.