தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அவ்வபோது பள்ளிக் கல்வித் துறையின் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தமிழகத்தில் மலைப்பகுதி அதிகம் உள்ள ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல்,திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் (மாற்றுத்திறனாளி, இதய அறுவை சிகிச்சை செய்த ஆசிரியர்களுக்கு விலக்கு) மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டாயம் ஓராண்டு காலம் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு பணியில் காலியாக உள்ள இடங்களில் முதலில் மலைப்பகுதிக்கு முன்னுரிமை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது.