தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி முடிக்க சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஓரளவு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு மீதமுள்ள பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெற உள்ளதால் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளது.