தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரம் காட்டியது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா மீண்டும் குறைந்த நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் தலைகாட்டுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனாவை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா பரவலை கண்காணிக்காவிட்டால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடையாறு, அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் மண்டலங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தொற்று பரவல் உள்ளது. லேசான அறிகுறிகள் இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் தவறாமல் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.