Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?….. மருத்துவத்துறை செயலாளர் சொன்னது என்ன?

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்கு தொற்று உள்ளது. தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை.. தொற்று பரவல் விஷயத்தில் அச்சப்பட வேண்டிய நிலையில் இல்லை, அக்கறைப்பட வேண்டிய நேரத்தில் உள்ளோம் என்று தெரிவித்தார்..

Categories

Tech |