Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் பிரபல பெண் தலைவர்… திடீர் மரணம்…!!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்எல்ஏவுமான யசோதா சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான யசோதா சற்றுமுன் காலமானார். அவர் உடல் நலக்குறைவால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் 1980 முதல் 1984, 2001 முதல் 2006 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வானார். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரின் இழப்பு அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |