தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என தனி நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் பார்களை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை இல்லை எனக்கூறி டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
Categories
BREAKING: தமிழகத்தில் பார்களை மூடும் உத்தரவுக்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!
