Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கல்லூரிகளுக்கு – கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் இன்று தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது சில தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகஸ்ட்-1 க்கு முன்னரே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது. அப்படி மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |