தமிழகத்தில் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எலி மருந்து மற்றும் பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தனிநபர்களுக்கு எலி மருந்து மற்றும் பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இந்த தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.இதுபோன்ற விற்பனையால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட நேரிடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Categories
BREAKING: தமிழகத்தில் இனி இந்த விற்பனைக்கு தடை…. அரசு அதிரடி…..!!
