சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் தன்மை குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று அதிகாலை நான்கு மணிவரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது திருச்செந்தூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து உயிரிழந்த குடும்பத்தினர் 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.