இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பினராயி விஜயன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ குழு தகவல் தெரிவித்துள்ளது.