தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவருக்கு தமிழக சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தேர் விபத்து குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கி கூறிய பிறகு உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக தமிழக அரசு சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது..