Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : டெல்லி சென்றாலே இடமாறுதலா…..? தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி….!!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக பொறுப்பேற்றார். அன்று முதல் தற்போது வரை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரி மாநிலத்தின் துணை செயலாளராகவும் இரண்டு பதவிகளை வகித்து வந்தார்.

இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டு கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாகவும், அவரிடம் கூடுதல் பொறுப்பாக இருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிக்கு கர்நாடக மாநில பாஜக துணைத் தலைவர் நிர்மல்குமார் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியானது. இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் “சும்மா டெல்லி சென்றால் அதற்குள் என்னை இடம் மாற்றுதல் செய்யப் போவதாக சொல்கிறார்கள். அரசியல்வாதியாக இருந்தபோதும் விமர்சனம் வருகிறது. ஆளுநராக இருந்த போதும் விமர்சனம் வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |