டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் பாபர் அசாம் தலைமையில் 12 பேர் கொண்ட அணியின் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. அதன்படி, பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கட் கீப்பர்), ஃபாக்கர் ஜமான், ஹைதர் அலி, முகமது ஹஃபீஸ், மாலிக், அசிஃப் அலி, ஷதாப் கான் (துணை கேப்டன்), இமாத் வசீம், ஹாசன் அலி, ஷாஹென் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் ஆடும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.