Categories
மாநில செய்திகள்

BREAKING: டி.என்.பி.எஸ்.சி.யில் 20% இட ஒதுக்கீடு… வெளியான அதிரடி உத்தரவு…!!!

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் மட்டும் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீடு வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்தது. இதனையடுத்து இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் மட்டும் பயின்றவர்களுக்கு டி என் பி எஸ் சி யில் 20% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கும் போது அதைக் குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள். இந்த புதிய அறிவிப்பு தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |