மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பின் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறப்பு நடந்தது. அதோடு அம்மா உயர்கல்வி மன்ற வளாகம் அம்மா வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பின் நடிகர் அஜீத் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா சிலை மீது போர்த்தப்பட்டிருந்த பச்சை நிற போர்வையை ட்ரோன் மூலமாகத் திறந்து வைத்தார். மேலும் ட்ரோன் மூலம் ஜெயலலிதா சிலை மீது மலர் தூவப்பட்டது.