Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்… முதல்வர் அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது தவிர பிற வழக்குகள் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று திரும்ப பெறப்படும் என அவர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதில் உரையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதில் உரையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |