கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தான் இந்திய நாட்டின் வருவாய் இழப்பு மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களில் நிதி சிக்கனம் மேற்கொள்ளப்பட்டு, கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியும் பல்வேறு வகையில் வரிகளை உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வரியை குறைக்க முடிவு எடுத்த நிலையில், டிசம்பர் ஜனவரி பண்டிகைகள் வருவதால் மதுபானங்கள் மீதான வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்பு தமிழகத்திற்கு இணையாக புதுச்சேரியிலும் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.