Categories
மாநில செய்திகள்

#BREAKING: சேலம் மாநகராட்சியில் இவர்தான் மேயர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் இன்று (மார்ச்.4) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மறைமுக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களிக்கின்றனர். திமுக கூட்டணியே 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளதால், பெரும்பாலான பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் அவர் போட்டியின்றி தேர்வானார். தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை அதிகாரியிடம் பெற்றுக்கொண்ட அவர் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ராமச்சந்திரன் வெற்றியினை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |