தமிழகத்தில் கொரோனா சற்று படிப்படியாகக் குறைந்து வருவதை ஒட்டி மாணவர்கள் என்னுடைய எதிர்காலம் கருதி 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழக மருத்துவத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும், மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம் பெற வேண்டும்.இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்து பாடம் நடத்தலாம் பள்ளி வளாகத்தில் எச்சில் துப்பி அதை தடுக்க வேண்டும் என்றும் தமிழக மருத்துவத் துறையை வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது .