சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி மும்பை, புனே, பெங்களூர், குருகிராமம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில்கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது மேலும் மேற்கு வங்கத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளது. இதில் 320 பேர் குணமடைந்துள்ளனர். எனவே மாநில அரசுகள் தேவைப்பட்டால் சூழலுக்கு ஏற்ப 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.