சென்னை காந்திநகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கு தேர்தல் முன்பகை தான் காரணமாக ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குடும்ப தகராறில் திமுக நிர்வாகியை கொலை செய்ததாக வினோத் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.