ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் சர்வதேச திரைப்பட விழாக்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இந்தியாவிலும் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. கோவாவை தொடர்ந்து சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட உள்ளது.
19 ஆவது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி 2022ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி வரை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த விழா மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சத்யம் சினிமாஸ், பிவிஆர் மற்றும் எஸ்டிடி அண்ணா சினிமாஸ் ஆகிய இடங்களில் திரைப்பட விழாக்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.