விஜய், சூர்யா என்று யாரையும் விடாமல் அவர்கள் குறித்து மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
பிக்பாஸ் மூலம் பிரபலமான மீராமிதுன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா – விஜய் ஆகியோரை கடுமையான முறையில் தகாத வார்த்தைகளால் மீராமிதுன் விமர்சனம் செய்தார். அதோடு நின்றுவிடாமல் அவர்களின் மனைவிகளையும் விமர்சனம் செய்தது ரசிகர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. ரசிகர்கள் இவருக்கு எதிராக சமூக வலைதளங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது அரசியல் கட்சி அரசியலில் நுழைய இருப்பதாக கூறியுள்ளது. விவாதப் பொருளாக மாறியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் அவரால் மட்டுமே முடியும் … தமிழ் உணர்வு உள்ளவர் மிக விரைவில் உங்களுடன் தமிழ் சொந்தங்களே என்று சீமானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/meera_mitun/status/1338457216316129282