ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில மாதங்களில் சிலிண்டர் விலை குறைக்கப்படுவதும் வழக்கம். அதன்படி தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ரூ.2,177.50 ஆக இருந்த 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை தற்போது ரூ.2,141 ஆக குறைந்துள்ளது. அதே சமயம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் விலை ரூ.1068.50 ஆக நீடிக்கிறது.
Categories
BREAKING: சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு…. இன்று முதல் அமல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!
