சாத்தான்குளம் வழக்கை முடிப்பதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையைத் திறந்ததாக கூறி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட இரண்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 10 போலீசாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மதுரை கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை விரைவாக முடிக்க கோரி ஜெயராஜ் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீஸ் காவலில் இறந்த வழக்கை முடிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. எப்போது விசாரணை முழுவதும் நடத்தி முடிப்பீர்கள்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.