தமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த மறைமலை அடிகளார் பேரன் சிவக்குமாரின் பணி தற்போது நிரந்தரம் செய்யப்பட்டதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழி கலப்பின்றி தூய நடையில் எழுதிய வரும் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழ் செழுமையாக வளர்த்த வரும், சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணிகளை சிறப்பாக செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ற தமிழர் மறைமலை அடிகளார் அனைவருக்கும் தெரிந்தவர்.
இப்படிப்பட்ட தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் இளைய புதல்வர் மழை பச்சையப்பன் அவர்கள் தற்போது வறிய நிலையில் உள்ளதாகவும், அவர் குடியிருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கட்டண நிலுவை தொகையை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பச்சையப்பன் வீட்டு வசதி வாரியத்திற்கு பராமரிப்பு கட்டணம் செலுத்துவதில் இருந்த நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்து கட்டணத்திற்கு வாழ்நாள் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது மகனான சிவகுமார் அவர்கள் தற்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த பணியை நிரந்தரம் செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.