Categories
மாநில செய்திகள்

BREAKING : சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்துக்கு தடை …!!

CAA சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற இருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நாளை இஸ்லாமிய அமைப்புகள் சென்னை சட்டமன்ற முற்றுகை அறிவித்திருந்தனர். அதே போல் மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் கூட வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று இந்திய மக்கள் மன்றம் சார்பில் வாராஹி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதில் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுபவர்கள். பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் , குறிப்பாக தலைமைச் செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலை , ராஜாஜி சாலை வழியாக  அலுவலகம் செல்வோரும், நீதிமன்றப் பணிகளுக்கு செல்வோரும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் . மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கெட்டு விடக்கூடாது என்பதற்காக  இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்  12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் , அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் , குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டடங்களை எப்படி கையாளுவது என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும்  வழிமுறை அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சென்னையை  பொருத்தவரை போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது, போராட்டத்துக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்த எந்த  தடையும் இல்லை. அதே போல  போராட்டம் நடத்த வேண்டுமென்றால் 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். சட்டமன்ற முற்றுகை போராட்டம் நேற்று தான் முடிவே செய்யப்பட்டது. எனவே சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு அனுமதிக்க முடியாது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் 5 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்ற நடவடிக்கையை பின்பற்றப்படுவதால் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கில் நான்கு வார காலத்துக்குள் மத்திய , மாநில அரசுகள் , டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி மார்ச் 11ஆம் தேதி வரை இந்த வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்.

Categories

Tech |