அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள அவைத்தலைவர் மதுசூதனனை பார்க்க ஒரே நேரத்தில் ஈபிஎஸ் மற்றும் சசிகலாவும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்குள் தொண்டர்கள் குவிந்தனர். சசிகலா வருகையை அறிந்த ஈபிஎஸ், சசிகலாவை சந்திப்பதை தவிர்க்கும் பொருட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது.