நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.
இம்முறையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மறதி நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா நோய் மூக்கு நரம்பு மூலம் நரம்பு மண்டலத்தை பாதிப்பதாகவும், அதனால் தொற்றில் இருந்து மீண்ட சிலருக்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஐசியூவில் இருந்தவர்களுக்கு அதிக மறதி வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.