பிரிட்டனில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் ஓமைக்ரான் வகை தொற்று பரவ தொடங்கியதிலிருந்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. இந்நிலையில் கேரளாவில் முதன்முதலாக ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.. பிரிட்டனில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் கண்டறிப்பட்டுள்ள நிலையில், அவர் எர்ணாகுளம் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்..
கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தில் தலா ஒருவருக்கு இன்று ஓமைக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கேரளாவிலும் ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.