Categories
தேசிய செய்திகள்

BREAKING : கேப்டன் வருண்சிங் விரைந்து குணமடைய வேண்டும்…. மோடி பிராத்தனை…!!!!

கேப்டன் வருண்சிங் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைந்தாலும் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம் தேசத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் பிபின் ராவத் பணியாற்றினார். துணிச்சலானவர், நாட்டின் படைகள் தன்னிறைவு அடைய கடுமையாக உழைத்தவர்.

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு சவாலையும் எதிர் கொள்வோம். இந்தியாவை இன்று சக்திவாய்ந்த நாடாகவும், மேலும் பலமானதாகவும் மாற்றுவோம். கேப்டன் வரும் சிங் விரைந்து குணமடைய வேண்டும் என்று நானும்,  இந்த தேசமும் பிரார்த்திக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |