Categories
மாநில செய்திகள்

#BREAKING: “கூட்டுறவு சங்கத் தேர்தல் ரத்து”…. சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2018ஆம் வருடம் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |