Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை…. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அவ்வகையில் தற்போது தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது.

அதன்படி ஜனவரி 1ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900 , கோவையில் இருந்து சென்னைக்கு 3000 ரூபாய், நெல்லையிலிருந்து சென்னைக்கு 3500 முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை, திருச்சியில் இருந்து சென்னைக்கு 2500 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இந்தச் செய்தி தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்த 49 ஆம்னி பேருந்துகளில் இருந்து 92,500 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. 9 பயணிகளுக்கு 9200 ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.மேலும் அதிக கட்டணம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |