டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தபோது தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்டு 2ம் தேதி முதல் 5 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். ஆகஸ்டு 2 மாலை தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3ம் தேதி முதல் நீலகிரியில் தங்கியிருந்து 6ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
Categories
BREAKING: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…. தமிழகத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்…..!!!!
